Categories
உலக செய்திகள்

“அன்னைக்கு இளவரசி கேட்டை கதறி கதறி அழ வச்சாங்க”…. ராஜ குடும்பத்தை கிழித்து தொங்கவிட்ட மேகன்….!!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் மேகன், இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக இளவரசி கேட்டை கதறி அழ வைத்ததாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை கிழித்து தொங்கவிட்ட சம்பவம் உலக அளவில் பேசும் பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் அந்த பேட்டியின் போது மேகன் “தன்னை இளவரசி கேட் அழ வைத்ததாக” கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் “இளவரசி கேட்-ஐ மேகன் தான் கதறி அழ வைத்துள்ளார்” என்று கூறுகிறார் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஒருவர்.

அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி இளவரசர் சார்லஸ் மனைவியின் குடும்ப நண்பர் Kirstie Allsopp ஆவார். மேலும் அவர் மேகன் ராஜ அரண்மனை ஊழியர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கேட் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொதுவாக நிதானத்தை கையாளும் இளவரசி கேட் அன்று மேகன் அரண்மனை ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் தான் கோபத்தில் கதறி அழுதுவிட்டார் என்று Allsopp தெரிவித்துள்ளார்.

Categories

Tech |