மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இதற்கு துணையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கியுள்ளார் .
மேலும் மாவட்ட தலைவர் சிம்சன் விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணைப்போகும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.