பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் உடனே கலிபோர்னியாவிற்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பாக, மன்னர் சார்லஸிடம் தங்களுக்கு இருக்கும் மனக்கசப்புகளை நீக்கிவிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.