வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு வைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குட்டகந்தூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்ததால் வெடித்த படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் ஸ்ரீராமுலு அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டு வைத்ததாக மிட்டாளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார், பாலாஜி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்ட குண்டா கிராமத்தில் விவசாயி தட்சிணாமூர்த்தி என்பவரின் பசுமாடும் நாட்டு வெடிகுண்டை கடிதத்தில் வாய் பகுதி கிழிந்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.