Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற குதிரை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் தேவியாக்குறிச்சி அய்யனார் கோவில், சார்வாய் புதூர் பொன்னியம்மன் கோவில், தென்குமரை அருஞ்சோலை அம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக குதிரைகளை நேர்ந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அந்த  குதிரைகள் தலைவாசல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றது.

அதேபோன்று மணிவிழுந்தான் ஏரிக்கு மேய்ச்சலுக்கு கோவில் குதிரை ஒன்று வந்துள்ளது. அந்தக் குதிரை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் ரோட்டை கடந்து செல்ல முயற்சி செய்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக குதிரை மீது மோதியது. இதனால் அந்த குதிரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்த விபத்தினால் காரின் முன்பக்கம் சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |