Categories
உலக செய்திகள்

மெய்நிகர் கடத்தல் மோசடியில் சிக்கும் சீன மாணவர்கள் ….!!

ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் மெய்நிகர் கடத்தல் காரர்களிடம் ஏமாற வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். சில நேரங்களில் இவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் மல்டேரியன் மொழியில் பேசும் சிலர். தாங்கள் சீன காவல்துறை அதிகாரிகள் அல்லது தூதரகத்தில் இருந்து பேசுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பேசும் அவர்கள் அந்த மாணவர் அல்லது மாணவி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் கைது செய்யப்படும் அபாயம் அல்லது நாடு கடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் மிரட்டுகின்றனர். மேலும் இதிலிருந்து தப்ப வேண்டுமானால் அந்த மாணவனோ மாணவியோ கடத்தப்பட்டதை போல் நாடகம் ஆட வேண்டும் என நம்ப வைக்கின்றனர். இதன் அடிப்படையில் ஏதாவது ஒரு விடுதியில் அறை எடுக்கும் அப்பாவி மாணவர்கள் அங்கு கை கால்களைக் கட்டிக்கொண்டு அக்காட்சிகளை கேமராவில் பதிவு செய்து மிரட்டியவர்களுக்கு அனுப்பிவிட்டு அவர்களுடைய அறிவுரையின் பெயரில் மொபைல் போனை அணைத்து விடுகின்றனர்.

அந்த நேரத்தில் அந்த காட்சிகளை பெற்றோர்களிடம் காட்டி 5000 முதல் 20,000 டொலர்கள் வரை பணம் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் இதுபோல் நடைபெற்ற 8 சம்பவங்களில் 30 லட்சம் டாலர்கள் பெற்றோர்கள் இழந்துள்ளனர். எனவே இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு அல்லது கல்வி நிலையத்திற்கு தெரியப்படுத்தப்படும் படி  யாருக்கும் யாரும் பணம் தரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |