சாக்கடையில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் பகுதியில் சின்னண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு எதிர்பாராமல் அங்கிருந்த சாக்கடையில் தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து சின்னண்ணன் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ்க்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் விழுந்த அந்த பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.