மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய பசுமாடு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
இதனையடுத்து சுமார் 2 மணிநேரம் பசுமாடு தண்ணீரில் தத்தளிப்பது கண்ட கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சக்திவேல், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை உயிருடன் மீட்டுள்ளனர்.