தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று பணியாளர்களிடம் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அமைச்சர் கேட்டறிதுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி உட்பட 10 இடங்களில் நடைபெற்ற முகாமினை துணிநூல், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்தப் பணியாளர்களிடம் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எத்தனை நபர்களுக்கு போடப்பட்டு இருக்கிறது என்ற விவரத்தை கேட்டறிந்துள்ளார்.
இதனை அடுத்து இம்மாவட்டங்களில் இனி எவ்வளவு நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதனையும் அமைச்சர் கேட்டறிந்துள்ளார். மேலும் முழுவதுமாக பரிசோதனை செய்துவிட்டு தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.