மேகன் மீது அரசக்குடும்பத்தினர் பரிவும் பாசமாக உள்ளார்கள் என்று ஆண்ட்ரூ மோர்டன் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் காதல் மனைவியான மேகன் மெர்க்கல் குறித்து புத்தகம் ஒன்று வெளியிட இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆண்ட்ரூ மோர்டன் இது குறித்து கூறியதில் “பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து மேகன் மெர்க்கல் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையில்லை. குறிப்பாக இளவரசர் சார்லசின் மனைவி கமலா பார்க்கர் பவுல்ஸ் மேகனுடன் தொடர்ந்து நெருக்கமாக முயற்சி செய்துள்ளார்.
மேலும் அதனை கமலா ரகசிய சைகைகள் மூலமாக வெளிப்படுத்தியும் உள்ளார். எப்பொழுதும் அரசக்குடும்பத்தினர் மேகன் மீது காட்டிய பரிவையும் பாசத்தையும் மேகன் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார். சான்றாக இளவரசர் சார்லசின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கமலா மேகன் கைகளை இறுகப்பற்றி உரையாடியும் அவர் விடைபெறும் போது முத்தமிட்டு வழியனுப்பியும் உள்ளார்.
பொதுவாக ராஜ குடும்பம் ஒருஅமெரிக்கா நடிகையை வெகு சீக்கிரத்தில் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது அரிதான ஒன்றாகும். மேலும் சார்லஸின் பிறந்தநாள் விழாவில் கமலா தன் சைகைகளாலும் உடல் மொழியாலும் மேகன் தங்களில் ஒருவர் என்று இந்த உலகத்திற்கு உணர்த்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.