புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் காய்கறி மார்க்கெட்டில் போதுமான இட வசதி இல்லாததால் பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நேரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அய்யனார் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட்டை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த்மோகன் பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்றும் சமூக இடைவெளியை கடைப்படித்து பொது மக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.