Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

மெக்சிகோ நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுறியும்  முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் மற்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் கொரோனாவால்2.21 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.அதனையாடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை கல்லறைக்கு தினமும் அடுத்தடுத்து கொண்டு வருவதால் உறவினர்கள் அனைவரும் கண்ணீரில் மூழ்கி உள்ளனர் .மேலும் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசு கொரோனாகட்டுபாடு  விதிமுறைகளை விதித்துள்ளது.மேலும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது

Categories

Tech |