Categories
உலக செய்திகள்

ட்ரம்புடன் ஒப்பந்த திருமணம் ? மனம் திறந்த மெலனியா ட்ரம்ப் …!!

அதிபர் ட்ரம்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவியான மெலனியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ட்ரம்பை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனை 5 நாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலுக்கு பிறகே உறுதிப்படுத்தியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் மெரி ஜோர்டன் தெரிவித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான டி ஆர்ட் ஆப் ஹெர் டீல்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் மெலனியா டிரம்ப் என்ற புத்தகத்தில் “ட்ரம்பின் பரம்பரை வாரிசாகவும் அவரது முன்னாள் மனைவியின் மூன்று பிள்ளைகளுக்கு இருக்கும் அதே சொத்துரிமை தனது முதல் கணவருக்கு பிறந்த போரன் என்ற மகனுக்கும் இருக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக டிரம்ப் உறுதி அளித்த பிறகு அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு  இருக்கும் செல்வாக்கினை புரிந்து கொண்டு ட்ரம்புடன் வாழ்வது குறித்து சிந்தித்த மெலனியா 6 மாதங்கள் ட்ரம்பிடம் ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தி ட்ரம்ப் அதனை ஏற்று கொண்ட பிறகே ட்ரம்புக்கு துணையாகவும், அமெரிக்காவிற்கு முதல் பெண்மணி தேவை என்ற எண்ணத்திலும் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புத்தகம் வெளியானதை தொடர்ந்து மெலனியா ட்ரம்பின் அலுவலகம் மறுத்துள்ளது. புத்தகத்தில் வெளியாகியிருப்பது உண்மை அல்ல இது ஒரு கற்பனை கதை என அமெரிக்க முதல் பெண்மணியின் தலைமை அலுவலர் ஸ்டீபெய்ன் கிரிஷம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |