மேலாண்மை குழு கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்களை தலைமையாசிரியர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களின் பெற்றோரிடம் பள்ளி தலைமையாசிரியர் அன்னம்மாள் மற்றும் ஆசிரியர்கள் தங்கப்பாண்டி, பரமேஸ்வரன் ஆகியோர் பள்ளி மேலாண்மை கூட்ட அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.