Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் சூரரைப்போற்று …. மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு…. வெளியான வீடியோ காட்சி….!!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படமானது மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படமானது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு மக்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு சிறந்த படம் மற்றும் நடிகருக்கான இரு விருதுகளையும் வென்றுள்ளது.

அதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விருது வழங்கும் விழாவானது ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆகவே மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதானது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ காட்சியானது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |