Categories
சினிமா தமிழ் சினிமா

மெலிந்து போன ஹன்சிகா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் நடிகர் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌. இதையடுத்து விஜய் ,ஜெயம் ரவி ,விஷால், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து அசத்தி வந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 .இந்தப் படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருந்தார் .

தற்போது நடிகை ஹன்சிகா சிம்புவுடன் நடித்துள்ள ‘மஹா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இந்நிலையில் கொழு கொழுவென குண்டாக இருந்த ஹன்சிகா முற்றிலும் மெலிந்து போய் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது . உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய ஹன்சிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Categories

Tech |