மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார்.
சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி. ஆ. ராசா, ”கோட்சே வன்மத்தோடு காந்தியை கொன்றதாக கூறினார் என்று பேச ஆரம்பித்த உடன் அவரை இடைமறித்த பிரக்யா, ”கோட்சே ஒரு தேசபக்தியாளர்; எனவே அவரைப் பற்றி இப்படி பேசுவது தவறு” என்று சர்ச்சைக்குரிய முறையில் கூறினார்.
அவரின் பேச்சுக்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், பாஜக உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்து, இனி இவ்வாறு பேசக்கூடாது என்று எச்சரித்திருந்தனர். மேலும், பாதுகாப்பு அமைச்சரவையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டதாக
பிரக்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரக்யா, அனைவரது முன்னிலையிலும் தான் கூறிய கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இருப்பினும், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்காமல் பிற கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர்.