Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லுறத செய்யுங்க… வசமாக சிக்கிய மர்ம நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

வடமாநில வியாபாரிகளின் மிரட்டிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை கடைவீதியில் உள்ள வடமாநில வியாபாரிகள் கடையை மூடச் சொல்லி சிலர் மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த வியாபாரிகள் கோட்டை போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் பகுதியில் வசிக்கும் ரியாஸ், பாலக்கரை பகுதியில் வசிக்கும் காஜா மொய்தீன் மற்றும் தென் பகுதியில் வசிக்கும் காஜா மைதீன் போன்ற மூன்று பேரை வடமாநில வியாபாரிகளை மிரட்டி குற்றத்திற்காக கோட்டை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |