Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு அளவில்லையா…? போதையில் ரகளை செய்தவர்கள்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

டாஸ்மாக் கடை திறந்த உடன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் சிலர் ரகளை செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அரசின் உத்தரவின் படி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த சிலர் போதையில் பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை திறந்ததால் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு சிலர் போதையில் ரகளை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Categories

Tech |