கொரோனா தொற்று பெண்களை விட அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
உலகம் முழுவதிலும் பல நாடுகளை தாக்கிய கொரோனா தொற்றிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களை தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது. உலக நாடுகளில் அதிகமாக தொற்று பரவி வரும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால் 71% ஆண்கள் மட்டுமே கொரோனா தொற்றினால் பலியாகி இருக்கின்றனர் எனவும் 29% மட்டுமே பெண்கள் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கான காரணம் மேற்கத்திய நாடுகளில் ஆண்கள் அதிக அளவில் குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும், மருத்துவ ரீதியாக பெண்களின் உடலில் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உள்ளது ஆனால் ஆண்களின் உடம்பில் ஒரு X ஒரு Y குரோமோசோம் உள்ளது. உயிர்வாழ்வதற்கு X க்ரோமோசோம்கள் உதவுகின்றன. மேலும் மூளையின் செயல்பாட்டிற்கும் உதவுகின்றன க்ரோமோசோம்கள் ஆண்களின் உடலில் ஒரு X குரோமோசோம் மட்டுமே இருக்கின்றது.
பிறப்பிலேயே பெண்கள் இரண்டு X குரோமோசோம்களுடன் சக்தி உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் ஆண்களைவிட பெண்களே பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். இரண்டு X குரோமோசோம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. பெண்களை ஒப்பிடும் பொழுது பசியைத் தாங்கும் சக்தியும், தொற்று நோயை எதிர்க்கும் சக்தியும் பெண்களிடமே அதிகம் உள்ளது. இதைப்போன்ற மாற்றங்களினால் தான் பெண்களை விட ஆண்களே அதிகம் இறக்கிறார்கள்.
ஆண்களைவிட பெண்களின் ஆயுள் காலம் ஆறு ஆண்டுகள் அதிகம். பெண்களுடன் ஒப்பிடும் பொழுது ஆண்களிடம் புகைப் பழக்கமும் அதிகமாக இருக்கிறது. மேலும் ரத்த அழுத்தம், இதய பிரச்சனை போன்றவையும் ஆண்கள் உயிரிழக்க காரணமாகின்றது. இந்த நிலையில் மும்பையில் தொற்றிலிருந்து குணமடைந்த 68 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆண்கள் அதிக அளவில் பலியாவதற்கும் குணமாக அதிக நாட்கள் ஆவதற்கும் காரணமே விந்து பைகள் தான்.விந்து பைகள் ACE2 என்பதை அதிக அளவு உற்பத்தி செய்வதே நோய் தொற்றிலிருந்து குணமாக அதிக நாட்கள் ஆக காரணம் ஆகும்.
பொதுவாக பெண்களின் உடலில் கொரோனா தொற்று 4 நாட்களுக்குள் அழிந்துவிடும் என்றால் ஆண்களின் உடலில் 6 நாட்கள் ஆகின்றது. உடலின் மற்ற பாகங்களை விட விந்து பைகளில் தான் வெகு நாட்கள் கொரோனா வைரஸ் வாழ்கின்றது. இதற்கு காரணம் விந்து பைகள் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை விட்டு விலகி இருப்பதே என விந்து பைகள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து பகுப்பாய்வு செய்யப்படவில்லை. பல ஆராய்ச்சிகள் செய்தலே இது பற்றி உறுதியாக சொல்ல முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.