பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆண்களுக்கு வழுக்கை
எல்லோரும் தங்கள் தலை முடியில் நாளொன்றுக்கு நூறு முடியை இழப்பது என்பது இயல்பான ஒன்று. இதில் சிலருக்கு தீவிரமாக முடி உதிரும். இதன் காரணமாகவே ஆண்களுக்கு தலையின் மேற்புறத்தில் வழுக்கை தோன்றுகிறது. முடி உதிர்வதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் வ வழுக்களை தள்ளிப்போடலாம். சில சமயங்களில் வழுக்கை வராமலும் தவிர்க்கலாம். இதை நிபுணர்களால் மட்டுமே சரி செய்ய முடியும்.
ஏன் இந்த முடி உதிர்கிறது
ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா என்று சொல்லக்கூடிய பரம்பரையாக வரக்கூடியது. பெற்றோர்களிடமிருந்து ஜீன்கள் மூலம் தூண்டுவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது. நெருங்கிய உறவினர்களில் வழுக்கை இருந்தால் உங்களுக்கும் அந்த பாதிப்பு அதிகரிக்கும். சில ஹார்மோன் மாற்றங்களால் முடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கான காரணங்கள் முழுமையாக கண்டறியப்படவில்லை. இதனை பராமரிக்க ஆண்கள் இளம் வயது முதலே முடி உதிர்வதை தீவிரமாக கண்காணித்து, காலம் தாமதம் செய்யாமல் அதற்காக ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோயெதிர்ப்பு மண்டலம்:
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது அது முடிகளை நேரடியாக தாக்குகிறது. இதனால் வலி, நோய் எதுவுமே இன்றி முடிகள் வெளியேறுகின்றது. இந்த இடத்தில் மீண்டும் முடி வளர்ந்தாலும் அது வலுவிழந்து உதிர்ந்து விடுகிறது. இதன் காரணமாகவே வழுக்கை உண்டாகிறது. அந்த இடத்தில் சிறிய புள்ளிகள் தோன்றும், எனினும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் வளரும் முடிகள் உதிர செய்யும். இதனை அலோபீசியா ஆட்டோ என்று அழைக்கப்படுகிறது.
உடல்நல பாதிப்பு
உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக சருமத்தில் எந்த பிரச்சனையும் வராது. படை தேமல் போன்றவை உச்சந்தலையில் வழுக்கையை உருவாக்குகிறது. தலையில் உள்ள முடிகளை உதிர வைத்து வழுக்கையை உண்டாகின்றது. இதனை ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்த முடியும். மன அழுத்தம், அதிர்ச்சி, திடீரென உடல் எடை குறைதல், அறுவை சிகிச்சை ஏதேனும் செய்தல் ஆகியவற்றில் முடி உதிர்தல் அதிகரிக்கும். சிலருக்கு நகங்களை கடித்து இழுப்பது போன்று, முடிகளை இழுப்பது பழக்கமாக இருக்கும். புருவமுடி மீசை முடி போன்று தலைமுடியை இழுத்து பலவீனப்படுத்தி கொள்வார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகின்றது.
அலங்காரம் செய்தல்
ஆண்களும் தற்போது பெண்களைப்போல அலங்காரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தலைமுடியை இழுத்து நபர் போடுவது, ஸ்டிரெயிட், ஹேர் கட்டிங் போன்றவை எல்லைமீறி செல்கின்றது. தேவையற்ற ஷாம்பு கொண்டு முடியை வீணடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே விரைவில் வழுக்கை ஏற்படுகிறது.
முடி உதிர்வதை சரி செய்ய
உணவில் ஆரோக்கியமான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இளம் காலத்திலேயே முடி உதிர்வது அதிகமாக இருந்தால் அதை கவனமுடன் பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே பிற்காலத்தில் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்க முடியும். முடிக்கு அடிக்கடி எண்ணெய் வைத்து தலை குளியல் செய்ய வேண்டும். ஹேர் டிரையர் என்பதை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. முடிகளை சேதப்படுத்தும் ஷாம்புகள், ஸ்ப்ரே, ஜெல் போன்றவற்றை உபயோகிக்காமல் இயற்கையான தேங்காய் எண்ணையை பயன்படுத்தி முடியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.