Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… ஆலோசித்து செயல்படுங்கள்…ஆர்வம் அதிகரிக்கும்…!

 

மீனம் ராசி அன்பர்களே..!   இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். நாசுக்காக பேசி பாக்கிகளை வசூல் செய்விர்கள். குடும்பச் செலவுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.அவசர முடிவுகள் எடுப்பதை மற்றும் தவிர்க்க வேண்டும் மிக முக்கியமாக காரியத்தில் ஏதேனும் அலட்சியம் காட்டக்கூடாது.

மனதில் தைரியம் உண்டாகும் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. என்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள்.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். ஆனால் எந்தவித பெரிய பிரச்சினை இல்லை. கூடுமானவரை மனைவியிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவரிடம் நீங்கள் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும்.பெரிய விஷயங்களை பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்வதுதான் மிகப்பெரிய உத்தமம்.

அதேபோல உங்களுடைய செயல்கள் இன்று நிறைவேறுவதற்கு துடிப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் இருக்கும் செயல்களில் விவேகம் காணப்படும். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிஷ்ட  நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |