Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த படகு… மீனவர்கள் நிலைமை என்ன…? தீவிரமாக நடைபெறும் தேடுதல் வேட்டை…!!

மீனவர்கள் 11 பேர் சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பெரியநாயகி எனும் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் வேறொரு படகு உடைந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அந்த படகை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் அந்தப் படகு மெர்சிடஸ் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் விசாரித்தபோது, வள்ளவிலை கிராமத்தில் வசிக்கும் கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான படகுதான் கவிழ்ந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜோசப் பிராங்கிளின் கடந்த 9-ஆம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். இவருடன் வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த செட்ரிக், ஜெனிஸ்டன், ஜெகன், மால்வின், ஜெபிஸ், சுரேஷ், விஜீஸ், ஜான், ஏசதாசன், பிரெடி ஆகிய 10 மீனவர்களும் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் படகு மட்டும் நடுக்கடலில் கவிழ்ந்து கிடப்பதால் மீனவர்களுக்கு என்ன ஆயிற்று? என அனைவரும் கவலையில் உள்ளனர். இதனையடுத்து வள்ளவிளை மீனவ கிராமத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையறிந்த மீனவ குடும்பத்தினர் மீனவர்கள் நிலைமையை  பற்றி தெரியாமல் கவலையில் இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களைத் தேடும் பணிக்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என மீனவ மக்கள் கண்ணீருடன் வலியுறுத்தினர்.

இதனையடுத்து மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர்க்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜெஸ்டின் ஆன்டனி ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் கர்நாடக கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது படகு திடீரென கவிழ்ந்து மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.  இதனால் அவர்களை ஹெலிகாப்டர் உதவியின் மூலம் தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |