Categories
உலக செய்திகள்

மீண்டும் இரவு நேர ஊரடங்கு …. ஓமன் அரசு அதிரடி அறிவிப்பு ….!!!

ஓமனில் கொரோனா  தொற்று  பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஓமனில் கடந்த சில நாட்களாகவே கொரோனா  தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில் , நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன்படி மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வேறு எதற்காகவும் வெளியே  வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த நேரங்களில் பேருந்து போன்ற போக்குவரத்து சேவைகளுக்கும் அனுமதி இருக்காது. ஆனால் அவசர கால சேவைகளான மருத்துவம் ,மின்சாரம் மற்றும் காவல்துறை ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதையடுத்து வீடுகளில் கூட்டம் சேர்ப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்நாட்டு  அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |