Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்கும் கவுதம் கம்பீர் ….! லக்னோ அணியின் ஆலோசகராக நியமனம் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில்  லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம்  விரைவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக 2 புதிய அணிகள் தங்கள் அணியில் 3 வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,ஐபிஎல்-லில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2 முறை  கோப்பையை வென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது லக்னோ அணிக்கு ஆலோசகராக செயல்படுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறும்போது ,”ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குவது மிகச்சிறப்பானது. அதோடு லக்னோ அணியின் ஆலோசகராக என்னை  தேர்வு செய்த கோயங்கா அவர்களுக்கு நன்றி .வெற்றி பெற  வேண்டுமென்ற நெருப்பு என்னுள் இன்னும் அணையவில்லை”என்று அவர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |