கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிக்கான 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது நேற்று பெங்களூரு கே .எஸ். சி எம் கிரிக்கெட் மைதானத்தில் குரூப் சி ஆட்டத்தில் கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே நடந்தது. இதில் கேரளா அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் அபாரமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு லிஸ்ட் ஏ வரிசையின் படி விளையாடிய முதல் போட்டியாகும். இந்தப் போட்டியில் இவர் உத்தரப்பிரதேசத்திற்க்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடினார். சில ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் போட்டியில் சூதாட்ட புகாரில் ஈடுபட்டு ஏழாண்டு தண்டனைக்கு பின் அவர் விளையாடிய முதல் போட்டியாகும்.
உத்திரப் பிரதேசம் அணியின் தொடக்க வீரரான அபிஷேக் கோஸ்வாமி 54 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து தன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய உத்திரபிரதேசம் அணியின் அதிக ரன்களை குவித்த அக்ஷ்தீப் நாத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். எதிர் அணியின் கேப்டனான புவனேஷ் குமார் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
அதன் பிறகு உத்தரபிரதேச அணியின் கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். ஒடிசா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஸ்ரீசாந்த் 41 ரன்களை குவித்து 2 விக்கெட்களை பெற்றார் . மழையின் காரணமாக தடைபட்ட போட்டியில் கேரள அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணி வென்றது.
தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஏலத்தில் ஸ்ரீசாந்த் ரூபாய் 75 லட்சம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் இறுதிப் பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதைப்பற்றி அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, ‘நாங்க ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை’ என கூறினார். நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறுவதற்காக என்னால் எட்டு வருடம் காத்திருந்து முடிந்த நிலையில், இதற்காக இன்னும் சில நேரம் கூட காத்துக் கொண்டிருப்பேன். இதற்காக நான் வருத்தப்பட போவதில்லை என்று கூறினார்.