சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மஹேந்திர சிங் தோனி .இவர் கடந்த 2010-ம் ஆண்டு சாக்ஷி சிங் ராவத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .இந்த தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா என பெயர் சூட்டினர். இதனிடையே நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றியை தோனியின் மனைவி சாக்ஷி ,மகள் ஸிவாமற்றும் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் ஆகியோர் கொண்டாடினர். இந்நிலையில் சாக்ஷி கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் ஸிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தி ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதிப்படுத்தி இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியது .தற்போது இந்த செய்தி காட்டுத் தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.