Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தொடங்குகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் …. எஞ்சிய போட்டிகள் ஜூன் 9 முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது…!!!

கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு  சார்பில் நடத்தப்படும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் போட்டியில் பயோ பபுளையும் மீறி, வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி கேட்டிருந்த நிலையில், அமீரக அரசும் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கான தனிமைபடுத்தல் ,பயணம் மற்றும் ஹோட்டல்கள் ஆகிய ஏற்பாடுகளை  பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செய்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள், வருகின்ற 9 ம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |