அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பு இனத்தவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வந்தது. இதற்கு உதாரணமாக தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள் கருப்பின மக்கள் மீது அடக்குமுறையை அமெரிக்கா செய்து வருவதாக கண்டனம் தெரிவித்தனர். கருப்பின மக்கள் அமெரிக்கா போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கருப்பின அமைப்புகள் குரல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ரோசெஸ்டர் மாகாணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் காருக்குள் ஏற்பட்டபோது அந்த சிறுமி ஏற மறுத்ததால் அந்த சிறுமி மீது பெப்பர் ஸ்பிரே எனப்படும், காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை போலீசார் முகத்தில் அடித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கைது செய்த வெள்ளையின காவலர் அன்ரே ஆண்டர்சன் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சிறுமி தங்களை தாக்கியதால் தான் அவரை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தினோம் என்று அவர்கள் பதில் அளித்து உள்ளனர். ஆனால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.