Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிப்பு….. அசுரனாக மாறிய இளைஞர்….. காரணமின்றி 3 பேருக்கு அறிவாள்வெட்டு….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் மூன்றுபேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் அவருக்கு இன்று காலை 9 மணியளவில் மர்ம நபர் அரிவாளால் வெட்டி வீசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்அமைந்திருக்கும்  நம்பர் 1 கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டைச்சாமி சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி மற்றும் மேனேஜர் மணியன் ஆகிய மூவரும் ஒன்பது மணிக்கு கடையை திறக்க வந்துள்ளனர்.

அங்கு கடை முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள மரபட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் அழகு ராஜா என்பவர் கருப்பு சட்டை போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது வந்த ஊழியர்கள் கடை முன்னால் உட்கார கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஆத்திரமடைந்த அழகு ராஜா என்பவர் தன் கையில் இருந்த அரிவாளை எடுத்து மூவரையும் சரமாரியாக வெட்டினர்.

இதையடுத்து அருகில் உள்ள டீக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அழகுராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அழகுராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அழகுராஜா தனது தகப்பனாரை இரண்டு தடவை அரிவாளால் வெட்டி கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மனநலம் குன்றிய இவரை மனநல காப்பகத்தில் விட்டுவிட்டு பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |