இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய சிறிய பிரச்சனைகளால் தான் மனநோய் உண்டாகி அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு பெரியவர்கள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் மனநலம் பா
அவ்வகையில் ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள சிறு குழந்தைகளுக்கும் மனநல பாதிப்பு ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கான பொதுவான அறிகுறிகளும் உள்ளன. அதாவது பள்ளி செயல் திறனில் மாற்றம், மதிப்பெண் குறைதல், அதிகமான கவலை மற்றும் பயம், ஓரிடத்தில் உட்கார முடியாமல் நிலை கொள்ளாமல் இருத்தல், அடிக்கடி கெட்ட கனவுகள், வன்முறை செயல்களில் ஈடுபடுதல், அதிக கோபம், கவனம் செலுத்த முடியாத நிலை, கற்றலில் உள்ள குறைபாடுகள் ஆன எழுதுவது மற்றும் படிப்பது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சினை உள்ளிட்டவை மனநோய்க்கான ஆரம்பப் பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது.