மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கண்டுபிடித்து தருமாறு மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரியில் உள்ள நல்லம்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தண்டபாணி வீடு வந்து சேரவில்லை. இதனால் தண்டபாணியின் மனைவி வளர்மதி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்துள்ளார் வளர்மதி. இதனையடுத்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து தண்டபாணியை விரைந்து தேடிவருகின்றனர்.