Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ… மனநலம் குன்றியவருக்கு நடந்த கொடுமை… திருச்சியில் பரபரப்பு…!!

தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய காணப்பட்டுள்ளார். இவருக்கு இளமாறன் என்ற சகோதரர் இருக்கிறார். இந்நிலையில் பார்த்திபனிடம் தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக அருகே உள்ள எலக்ட்ரிஷன் குமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு இளமாறன் கூறியிருக்கிறார். இதனையடுத்து குமாரின் வீட்டிற்கு சென்ற பார்த்திபன் அங்கு குமார் இல்லாத காரணத்தால், அவரது மகளிடம் குமாரின் செல்போன் எண்ணை தரும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால் செல்போன் எண்ணை அவரது மகள் கொடுக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள ஒரு டீக்கடையில் பார்த்திபன் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வந்த எலக்ட்ரீசியன் குமார், அவரது என்ஜினீயரிங் பட்டதாரியான மகன் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் சிவராமன் ஆகிய மூவரும் பார்த்திபனிடம் தங்கள் வீட்டுப் பெண்ணின் செல்போன் என்னை எப்படி நீ கேட்கலாம் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதில் கோபமடைந்த மூவரும் பார்த்திபனை சரமாரி அடித்தும், அவரது வயிற்றில் உதைத்தும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இளமாறன் அங்கு விரைந்து வந்து தனது சகோதரனை தாக்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு, உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் பார்த்திபனுக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்திபன் இறப்பதற்கு காரணமாக 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |