பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார் நடிகர் விஜய்.
விஜய் பேசும் போது ,வாழ்கைல அவங்க மாதிரி , இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க, அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாழுங்க என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் வழங்கிய விஜய் அரசியல்ல புகுந்து விளையாடுங்க, பட் விளையாட்டில அரசியல கொண்டு வராதீங்க என்று தெரிவித்தார்.பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல் தெரிவித்த விஜய் இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க , சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க என்று வேண்டுகோள் விடுத்தார்.
தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்ய வேண்டாம் என்று தெரிவித்த அவர் , சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று ஆளும் கட்சியை சீண்டினார்.எதிரியா இருந்தாலும் மதிக்கணும், ஒருமுறை எம்ஜிஆரிடம் கலைஞர் குறித்து தவறாக பேசிய் அமைச்சரை வெளியே போ’ என எம்ஜிஆர் பேசியதை விஜய் சுட்டிக்காட்டி பேசினார்.
வாழ்க்கையும் கால்பந்து விளையாட்டு போன்றது தான் என்று குறிப்பிட்ட அவர் , நாம கோல் போட ட்ரை பண்ணுவோம், அதை தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்குறவனே சிலசமயம் சேம்சைட் கோல் போடுவான் என்று குறிப்பிட்ட அவர் ,யாரோட அடையாளத்தையும் ஏத்துகாதீங்க, உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குங்க. புடிச்சா ஏத்துக்கோங்க என்று சொல்லியதோடு எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்கே உட்கார வச்சிங்கன்னா, எல்லாம் கரெக்டா இருக்கும் என்று மத்திய அரசையும் எச்சரித்தார் நடிகர் விஜய்.
நடிகர் விஜயின் இந்த பேச்சு தற்போது நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு காரணமாக இருந்து வரும் ஆளும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக கட்சிகளுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் விஜயின் இந்த பேச்சு பல்வேறு மக்களிடம் இரவோடு இரவாக சென்றடைந்து. அதை நிரூபிக்கும் வகையில் இரவோடு இரவாக #ThalapathySpeech என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது. தமிழ் நடிகர்கள் சூர்யா , விஜய் அரசுக்கு எதிராக பேசுவது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.