கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுமியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையை வெறுத்து மனமுடைந்த சரத்குமார் திடிரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.