Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த வியாபாரிகள்…. சட்டென நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் பால் வியாபாரியான ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு பால் வியாபாரியான மணி என்பவருடன் முருங்கபட்டியில் இருக்கும் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பால் வேன் இவர்களின் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பால் வேன் ஓட்டுனரான சிவகுமார் என்பவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து விட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |