Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மேற்கூரையை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஅள்ளியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நாச்சியப்பன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது நாச்சியப்பனுக்கு தெரியவந்தது.

இதேபோன்று மணி என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டூடியோவின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி மர்ம நபர்கள் கேமரா, பிளாஷ் லைட் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 பேரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |