தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் சென்னையை பொருத்தவரை நோய்த்தடுப்பு பணிகளை கையாண்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், இந்திய அளவில் எந்த மாநகராட்சியும் செய்யாத அளவில் 11 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து உயர் கமிட்டி ஆய்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினர்.