Categories
உலக செய்திகள்

ஜெர்மன் அதிபர் ராஜினாமாவிற்கு பின் பெறவுள்ள ஓய்வூதியம்.. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்..!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், தன் பதவியை இராஜினாமா செய்த பின்பு மாதந்தோறும் அதிக தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். அதாவது புதிய ஆட்சி அமைந்த பின் ஏஞ்சலா மெர்கல் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். எனினும் அவரின் வருங்கால திட்டங்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

தன் வருங்கால திட்டங்கள் குறித்து சிந்தனை செய்வதற்கான நேரம் மற்றும் இடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம், ஏஞ்சலா மெர்க்கலுக்கு, அதிபர் பதவியிலிருந்து வெளியேறிய பின் மாதந்தோறும் 15,000 யூரோக்கள் ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

ஏஞ்சலா மெர்க்கல், கடந்த 1990 ஆம் வருடத்திலிருந்து, ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்  மற்றும் 15 வருடங்கள் அதிபராக இருந்திருக்கிறார். எனவே நாடாளுமன்ற ஊதியத்தில் 65% ஓய்வூதியம் பெற, அவருக்கு தகுதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசு செலவில், உதவியாளர்களையும், செயலாளர் மற்றும் ஓட்டுனரையும் பணிக்கு வைக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |