உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தும்வகையில் ஈடுபட்டால் அந்நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூட தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, “உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகள் எங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டால் யாராக இருப்பினும் தங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும். எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. அதனால் தாங்கள் பெருமை கொள்ளவில்லை. மேலும் உக்ரைனை நாங்கள் நண்பனாக தான் நினைத்து வந்தோம். இருப்பினும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை உக்ரைனுக்கு எதிரான நாடாக மாற்றி விட்டது” என்று தெரிவித்துள்ளார்.