பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கெல் தற்கொலை செய்யும் எண்ணம் தனக்குள் தோன்றியது என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி ஒன்று அளித்தனர். தம்பதியரின் அந்த பேட்டி சில மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில் மெர்க்கல் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார். அதில், ” ஒருகட்டத்தில் மன ரீதியான தனிமையால் வாழ பிடிக்காமல் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் முடிவு எடுத்தேன். என்னுள் இருந்த தற்கொலை செய்யும் எண்ணத்தை ஹரியிடம் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது.
ஒருவேளை நான் அவரிடம் என்னுள் தோன்றிய எண்ணத்தை சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரத்தில் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். நான் மனரீதியாக உணர்ச்சிவசப்படக் கூடியவள். மிகவும் சிறிய கஷ்டத்தை கூட தாங்க முடியாமல் நொறுங்கிப் போய் விடுவேன். அதனால் தான் ஹரி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருப்பார்” என்று கூறியுள்ளார். மேலும் கென்சிங்டன் அரண்மனையில் நான் ஒரு கைதியை போல் தான் வாழ்ந்து வந்தேன் என்று மெர்க்கெல் கூறியுள்ளார்.