Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணித் துவைத்து கொண்டிருந்த பெண்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கன்னித்தாய் என்ற பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முருகன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சுகன்யா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். இதனையடுத்து சுகன்யா தனது மகளுடன் வீட்டிற்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார். இதனால் வீட்டின் உள்ளே ஆகாஷ் மட்டும் தரையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகன் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஆகாஷ் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது குழந்தை ஆகாஷின் வலது கை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த சுகன்யா மற்றும் அருகில் உள்ளவர்கள் அனைவரும் கதறி அழுதனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ராதாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமைய்சிங் மீனா, தாசில்தார் ஜேசுராஜன், இன்ஸ்பெக்டர் சாந்தி, ஜான் பிரிட்டோ மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து காவல்துறையினர் ஆகாஷின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது, அப்பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. அந்த கல் குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் தான் கல்குவாரியில் வைத்த வெடி வெடித்த போது முருகன் வீட்டில் அதிர்வு ஏற்பட்டு மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை ஆகாஷ் இருந்துள்ளான். எனவே அங்குள்ள கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறினர்.

மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், அதுவரை ஆகாஷ் உடலை எடுக்க விட மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்குவாரிகள் மூடுவதற்கு விரைவாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் உறுதியளித்த பின் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |