மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா தாலுக்கா மேல்விஷாரம் பள்ளிக்கூடம் 2-வது தெருவில் ஞானமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தனது ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் அவரின் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த மூதாட்டி ஞானமணியை குடும்பத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஞானமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரின் உடலுக்கு அமைச்சர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.