Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்,அசாம் மாநிலங்களில் …முதற்கட்ட வாக்குப்பதிவு …நேற்று மாலையுடன் நிறைவு …!!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவானது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

சட்டமன்ற  தேர்தலுக்கான  முதற்கட்ட வாக்குப்பதிவானது  ,அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காள மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ,அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்கை  பதிவிட ,நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்குப்பதிவு செய்ய ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவில் மூத்த குடிமக்கள் ,மாற்றுத்திறனாளிகள், ஆண்கள், பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் வந்து தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.

கொரோனா  தொற்றின் காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டது.  மேற்கு வங்காளத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.61% வாக்குப்பதிவும் ,அசாமில் 24.48% வாக்குப்பதிவும்  பதிவாகியது .மதியம் 1 மணி நிலவரப்படி ,மேற்கு வங்காளத்தில் 40.73% வாக்குப்பதிவு,அசாமில் 37.47%வாக்குகள் பதிவாகியது .அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த வாக்குப் பதிவில் அசாம்  72.14%  வாக்குப்பதிவும் , மேற்கு வங்காளம் 79 .79% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Categories

Tech |