Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபு சொன்ன ஒரு வார்த்தை… துளைத்தெடுக்கும் அஜித் – சிம்பு ரசிகர்கள்..!!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Image result for ajith simbu

படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். வாழ்த்து செய்தியின் வழியாக ரசிகர்கள் பலரும் வெவ்வேறு விதமான கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளனர்.

குறிப்பாக அஜித் நடிப்பில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும்?, மாநாடு படத்தின் தற்போதைய அப்டேட் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர். ரசிகர்களின் அன்புத் தொல்லை அளவில்லாமல் போக அடுத்த அறிவிப்பு வரை, காத்திருக்க வேண்டியதுதான் போல என மீம்ஸ்களையும் அவருக்கு அனுப்பி வருகின்றனர்.

Categories

Tech |