Categories
உலக செய்திகள்

அடடே…. பிரபல நாட்டில் மீட்பு படை நாய்க்கு…. சிலை திறப்பா….?

மெக்ஸிகோவில் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரு உதவி செய்த மெக்ஸிகோவின் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிரிடா என்ற 13 வயதுடைய மோப்ப நாய் ஓய்வு பெற்ற பின்னும் அதன் அபார திறனும், அழகும் குறையவே இல்லை. இது குறித்து மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா கூறியதாவது, ” இன்று ஃபிரிடாவின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை உணர்ச்சி பெருக்குடன் பார்க்கின்றோம்.

மெக்ஸிகோ நிலநடுக்கத்தின் போது மெக்ஸிகன் கடற்படையின் ஊரக ஆய்வு மற்றும் மேற்ப படையிலிருந்து ஃபிரிடாவின் மூலம் எங்கள் குழுவினர் மிகப்பெருமை அடைந்துள்ளனர். இங்கு கடற்படை செயலாளர் ஃபிரிடாவின் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த ஃபிரிடா மோப்ப நாய் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.  எங்களது மிகச்சிறந்த அமைப்பில் இணைந்து ஃபிரிடா அளப்பரிய பணியை செய்திருக்கின்றது.

உனது வாழ்க்கை மெர்சிகோவுக்காக எதையும் அர்ப்பணிக்கு மக்களை உத்வேகப்படுத்திகின்றது. அன்புக்குரிய ஃபிரிடாவுக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஃபிரிடாவின் சிலை அது மீட்பு பணியின் சீருடை அணிந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. காலில் பாதுகாப்பு பூஸ்ட்கள் முகத்துக்கு கவசமும் அணிந்துள்ளது. இந்த சிலை வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 53 மீட்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும் ஃபிரிடா, 12 பேர் உயிருடன் ஏற்கப்படவும் மேலும் 40 உடல்களை மீட்டெடுக்கவும் உதவியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |