மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் இன்று ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.