மேஷம் ராசி அன்பர்களே …! இன்று வெளியூரிலிருந்து நல்ல சுப செய்திகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணியை மட்டுமே செய்யுங்கள், இருந்தாலும் கூடுதல் கவனமாக செய்யுங்கள். சொத்து சார்ந்த வழக்குகள் ஓரளவு வெற்றியை கொடுக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள். கடனும் தாமதமின்றி கிடைக்கும்.
தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியை இப்போதைக்கு ஏதும் செய்ய வேண்டாம். லாபத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்வார்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் ரொம்ப நல்ல நாளாக இருக்கும். இருந்தாலும் பேசும் பொழுது மட்டும் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம்.
இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்