மேஷம் ராசி அன்பர்களே …! இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக தான் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்று கொடுக்கும்.
கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னதாக பிரச்சினைகள் எழக்கூடும் எதையும் தயவு செய்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.காதலர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், அது மட்டுமில்லாமல் உங்களுடைய வசீகரமான பேச்சின் மூலம் புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் உண்டு.
பெரிய தொகையை ஈடுபடுத்தி எந்தவித முதலீடுகளும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். வெள்ளை உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதேபோல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்.