மேஷ ராசி அன்பர்களே …! இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள் மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் இருக்கும். ஆனால் சில விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமாக தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வாகனத்தில் செல்லும்போது நிதானமாக செல்லுங்கள்.
பயணங்களில் மிகுந்த அக்கறை வேண்டும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பணவரவு ஓரளவு வந்து சேரும். எதிரிகள் வியந்து விலகிச் செல்வார்கள். பெற்றோருக்கு பெருமை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனம் இருந்தால் இன்றைய நாள் மிக சிறப்பாக இருக்கும். அதே போல பயணங்களின் பொழுது உடைமைகள் மீது கவனமாக இருங்கள். வீட்டை விட்டு வெளியே தங்கக் கூடிய சூழல் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள். செரிமான பிரச்சனைகள் இருக்கும்.
உடல் ஆரோக்கியமும் முக்கியம். தேவையில்லாத வீண் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். மற்ற விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டையும்,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும்.